Sunday 8 April 2012

மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!


மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!

Post image for மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!
இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)
        முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.
    அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
   “நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
    இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.
    நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். “குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின்  அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
    உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”  முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.”  அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி
    ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள்  கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
   (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
    நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் “விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் “உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)
       இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.
முன்மாதிரி முஸ்லிம்

துவாவுடைய ஒழுக்கங்கள்


துவாவுடைய ஒழுக்கங்கள்

Post image for துவாவுடைய ஒழுக்கங்கள்
1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
    1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.

    இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!
   அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!

    அறிவிப்பாளர் கூறுகிறார்:
பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ

    2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்
    உயர்வானவனாகிய அல்லாஹ்,

(البقرة )   وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ  
    மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு  அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عمِلْتُ وَشَرِّ مَالَمْ أَعْمَلْ
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மின் ஷர்ரி மா அமில்த்து, வ ஷர்ரி மாலம் அஃமல் என்று துஆச்செய்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.
    எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்.
    திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
    அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
   (உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா  ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ

    நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும், பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனை புரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.
    3. நமது பாவங்களை ஒப்புவித்தல்    இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும்.
    அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
    நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம்

    4. கேட்பதில் உறுதி 
    உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம்

    கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில் நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது, அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.
    5. பிரார்த்தனையில் கடுமை
    ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்று கூறினார்கள். (நூல்:அபூதாவூது)

    6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல்
    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    7. ‘ஜவாமிஉ’ (சுருக்கமான வார்த்தையில் விசாலமான அர்த்தங்களைக் கொண்டுள்ள) துஆக்களைக் கூறி பிரார்த்தனைப் புரிதல்
    ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களில் நிறைய பொருளை தரும் சுருக்கமான வார்த்தைகளை விரும்புபவர்களாகவும் அதுவல்லாத வார்த்தைகளை கூறாது விட்டு விடுபவர்களாகவும் இருந்தனர். நூல்: ஸன்னன் அபீதாவூது, அஹ்மது
    இதுமாதிரியான பிரார்த்தனைகளில் உள்ளதே ஃபர்வா பின் நவ்ஃபல் அவர்கள் அறிவிப்பில் வந்துள்ள ஒன்று.
    நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கொண்டு துஆச் செய்பவர்களாக இருந்தார்களோ அப்படியான ஒரு துஆவைப்பற்றி நான் கேட்டேன்.
    (பொருள்: யாஅல்லாஹ்! நான் செய்து விட்டவற்றின் தீங்கிலிருந்தும் மற்றும் நான் செய் யாதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்) நூல்: முஸ்லிம், அபூதாவூது
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِي أِمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ جِدِّيْ وَهَزْلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَ أَنْتَ عَلى كُلِّ شَيئٍ قَدِيْرٌ
    அல்லாஹும்மக் ஃபிர்லீ கதீஅதீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பி?ி மின்னீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ ஜித்தீ வ?ஜ்லீ, வ கதஈ, வ அம்தீ, வ குல்லு தாலிக இன்தீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ மா கத்தம்த்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ அன்த்தல் முகத்திமு, வஅன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர் என இந்த துஆவைக் கூறி பிரார்த்தனை புரிபவர்களாக நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என அபூமூஸப் அல் அஷ்அரீ – ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்رَبَّـنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُونَا بِالْإِيْمَانِقَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَلِأَخِيْ وَأَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَرَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
    (பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய தவறை, எனது அறியாமையை, எனது காரியத்தில் வீண்விரயத்தை, என்னைவிட நீ அறிந்திருக்கும் ஒன்றை எனக்கு நீ பொருத்தருள்வாயாக!
    யாஅல்லாஹ்! என்னுடைய முயற்சி(யால் ஏற்பட்டதை), என்னுடைய சோர்வு, என்னுடைய தவறு, வேண்டுமென்றே தெரிந்து என்னால் செய்யப்பட்டது, என்னிடமுள்ள அவை ஒவ்வொன் றையும் நீ எனக்கு பொருத்தருள்வாயாக!
    யாஅல்லாஹ்! நான் முற்படுத்தியவற்றை, நான் பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, நான் பகிரங்கப்படுத்தியவற்றை, நான் விரயம் செய்தவற்றை, என்னை விட நீ எதை மிக அறிந்திருக்கின் றாயோ அந்த ஒன்றை நீ எனக்கு பொருத்தருள்வாயாக! நீதான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்திவைப்பவன், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.)
    8. பிரார்த்தனை புரிபவர் தனக்காக முதலில் கேட்பார்
    உயர்வானவனின் கூற்றில் வந்துள்ளவற்றைப் போன்று:-

    எங்களுடைய இரட்சகனே! எங்களுக்கும், ஈமான் கொண்டு எங்களை முந்திவிட்டார்களே அத்தகையோரான எங்களுடைய சகோதரர்களுக்கும் நீ பொருத்தருள்வாயாக! அல்ஹஷ்ரு: 10
    இன்னும் அவனுடைய கூற்று:-
    எனது இரட்சகா! எனக்கும் என்னுடைய சகோதரருக்கும் நீ பொருத்தருள்வாயாக! மேலும், எங்களை உன்னுடைய ரஹ்மத்தில் நுழைவிக்கச் செய்திடுவாயாக! என்று (நபி மூஸப்) அவர்கள் கூறினார்கள். அல் அஃராஃப்:151
இன்னும், அவனுடைய கூற்று:-
    எங்கள் இரட்சகா! எனக்கும், என்னுடைய பெற்றோர்களுக்கும், விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் நாளில் பொருத்தருள்வாயாக! இப்றாஹீீம்:41
    நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரை யாவது நினைவுகூர்ந்து, அவருக்காக பிரார்த்தனை புரிவார்களானால் தனக்காக அதை முதலில் கேட்டு ஆரம்பிப்பார்கள். (திர்மிதீ)
    எனினும், இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டாயமான வழக்கமாக இருந்ததில்லை. ஏனெனில், சில சமயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவருக்கு துஆச் செய்து கேட்டதை தனக்கு கேட்காமல் துஆச் செய்திருப்பதும் சரியான வழியில் வந்துள்ளது (நபி இப்றாஹீீம் அவர்களின் துணைவியர்) ஹாஜர் விஷயத்தில், ‘இஸ்மாயீலின் தாயாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! ஜம்ஜம் (நில்நில்)என்று சொல்வதை விட்டிருப்பார்களானால் (ஜம்ஜம் ஊற்றான) அது பெருக்கெடுத்து ஓடிவிடும் ஒரு பெரும் ஊற்றாக ஆகியிருக்கும் என்று கூறியது போன்று!
    9. துஆச் செய்ய விரும்பத்தக்க நேரங்களில் துஆச் செய்ய முயற்சிப்பது 
    அவ்வாறான நேரங்களில் உள்ளதே நடு இரவு, பாங்கு மற்றும் இகாமத்துக்கு இடையேயான நேரம், ஸஜ்தாவில், (போருக்கு) அழைக்குமிடத்தில், போர் சமயத்தில், ஜும்ஆ தினத்தின் அசருக்குப்பின், அரஃபா நாள், மழை பொழியும் நேரம், ரமளானின் கடைசி பத்து நாட்கள்.

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்


தவிர்க்க கூடாத பத்து உணவுகள்


Post image for தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.   
  வெள்ளைப் பூண்டு:பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.   
 வெங்காயம்:வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.    
    காரட்:நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.   

   ஆரஞ்சு :வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.     
    
  பருப்பு வகைகள் :பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.    
     

கோதுமை ரொட்டி :நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.    
     
இறால் மீன் மற்றும் நண்டு :அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.    
      
    தேநீர் :தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.    
   
பாலாடைக்கட்டி :சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.    
     
முட்டைக்கோஸ் :குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.        
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.    
    

உலக அழிவின் சாத்தியக்கூறுகள்


உலக அழிவின் சாத்தியக்கூறுகள்




ன்று உலகம் விஞ்ஞானம்,தொழிநுட்பம்மருத்துவம்கலை,இலக்கியம் என பல்துறைகளிலும்அபரிமித வேகத்தில் முன்னேறிச்சென்றுகொண்டிருக்கின்றது.ஒவ்வொரு துறையிலும் மனிதஅறிவு மேற்கொள்ளும் ஆழமானஆய்வுகளே இதற்குவித்திட்டுள்ளது எனலாம்எனினும்இத்துனை வேகமான முன்னேற்றம்அதன் ஆயுளின் தொடர்ச்சியானகுறைவைக் காட்டுகின்றது.இல்லாமையிலிருந்துஉருவானவொன்று வளர்ந்துவளர்ந்து இறுதியில் அது இல்லாமலேயே போவதுதான் இயற்கையின் நியதி.இல்லாமையிலிருந்து தோன்றிய மனிதன் இறுதியில் மரணித்து எவ்வாறு இவ்வுலகில்பூச்சியமாகிப் போகின்றானோ அதுபோன்றுதான் பிரபஞ்சமும்அது எவ்வாறுஇல்லாமையிலிருந்து தோன்றியதோ அவ்வாறே அது அழிவதும் நிச்சயமானது.

பெரும்பாலானோர் உலகம் அழியக் கூடியதென நம்பினாலும் மற்றும் சிலர் இதனைநம்புவதில்லைஇக்கொள்கை அவர்களது இவ்வுலக வாழ்வின் போக்கையேமாற்றிவிடுகின்றதுஇது முற்றிலும் இஸ்லாமிய அகீதாவுக்கு முரண்பட்டுப்போவதைக்காணலம்முஸ்லிம்கள் கூட உலக அழிவை நம்பினாலும் அவர்களது நடத்தைக் கோலங்கள்அதனைப் பிரதிபலிப்பதாக இல்லைஇஸ்லாமிய மார்க்கமானது இப் பிரபஞ்சம் ஒரு நாள்அழிக்கப்பட்டுவிடும் என்று ஆணித்தரமாக முழங்கிக்க்கொண்டிருக்கிறன்துஇஸ்லாம்மார்க்கத்தின் இக் கூற்று அல்குர்ஆன் ஒரு இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகிறது.நடைமுறை வாழ்வில் மனிதன் எதிர்கொள்ளும் பல சவால்கள் இவ்வுலக அழிவைநிதர்சனப்படுத்துகின்றனவளி மாசடைதல்ஓஷோன் படையில் ஓட்டைபுவிவெப்பமடைதல்நச்சு வாயுக்களின் தாக்கம்மண் சரிவுவெள்ள அபாயம்விண்கற்களால்பாதிப்பு... என இவ்வாறு மனிதன் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்சமகால இச்சவால்கள்எவ்வாறு இறைதேமான அல்குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்துகின்றன என்று நாம்பார்ப்போம்.

புவி வெப்பமடைதல்


இன்று விஞ்ஞானிகளின்கவனத்தை ஈர்த்துள்ள பரவலாகப்பேசப்படுகின்ற ஒரு விடயம் தான்புவியின் வெப்பம்அதிகரித்தலாகும்இது ‘புவிவெப்பமடைதல் - Globle Wormingஎன்று அழைக்கப்படுகிறது.புவிவெப்பமடைதலால் எதிர்காலத்தில் புவியின்நிலைபற்றியும்புவியில் உயிர்வாழ்க்கை பற்றியும் விஞ்ஞானிகள்ஆய்வு செய்கிறார்கள்இதன்முடிவுகளை அவர்கள்பின்வருமாறு வெளியிட்டுள்ளனர்;. “மனிதசெயற்பாடுகளினால்வெளியிடப்படும் சில வாயுக்கள்காரணமாக ஓசோன் படையில் ஏற்படும் துளை காரணமாக புவியின் வெப்பநிலைஅதிகரிக்கிறதுபச்சைவிட்டு வாயுக்களின் (Green house gas) வெளியேற்றம்புவிவெப்பமடைதலில் பங்களிப்புச் செய்கிறதுபச்சை வீட்டு விளைவை காபனீரொட்சைட்டு(Co2)மெதேன் (CH4)நைதரொட்சைட்டு (NO2என்ற வாயுக்களே நிர்ணயிக்கின்றன.

இவ்வெப்ப அதிகரிப்பானது 2020ஆம் ஆண்டில் 1.50C ஆக உயரும். “மேலும் காலநிலை பற்றியஆய்வொன்றை மெற்கொண்ட ‘அட்லெடிக் கவுன்சில்’ என்ற அமைப்பின் 250 விஞ்ஞானிகள்சுமார் 4வருடங்கள் தீவிரமாக ஆராய்ந்ததன் பின்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையை நாம்இங்கு அவதானிப்பது பொருத்தமானதாகும்இவ் அறிக்கையினது சுருக்கம் வருமாறு. “புவியின் ஏனைய பகுதிகளை விட வடதுருவம் இரு மடங்கு அதிகமாக வெப்பமடைகிறது.இதனால் 20% ஆன பனிக்கட்டிகள் உருகிவிட்டன. 2100ஆம் ஆண்டளவில் அங்கு வாழும்துருவக்கரடிகள்கடல்சீல்கள்பென்குயின் பறவைகள் போன்ற உயிரினங்கள் முற்றாக அழிந்துவிடும்அது மட்டுமின்றி துருவப்பகுதியின் பனிக்கட்டிகள் உருகி மத்திய பகுதிகளை நோக்கிவடிவதனால் இப்பகுதியிலுள்ள கடல் நீரின் மட்டம் அதிகரித்து புவியின் பெரும் பகுதிகடலினால் காவு கொள்ளப்படும்.” என்கின்றனர்இதனைத்தான் அல்குர்ஆன் சூசகமாகஇவ்வாறு குறிப்பிடுகின்றது.

நிச்சயமாக பூமியை அதன் ஓரங்களிலிருந்து (படிப்படியாகநாம் குறைந்து வருவதைஅவர்கள் காணவில்லையா?” (அல்குர்ஆன்)

சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தின் காரணமாக புவி வெப்பமடைந்து எதிர்வரும் 2012 ஆம்ஆண்டில் புவி அழியப்போகின்றது என்ற பீதி அண்மையில் உலகெங்கும் ஒலித்ததையும்அவதானிக்க முடிந்ததுபுவி சிதைந்து அழிவதனை அண்மையில் வெளியான 2012, 2020, Tsunami, The Day After Tommorow  என்ற திரைப்படங்கள் மிகத் தத்ரூபமாகச் சித்தரிக்கின்றனஇந்நிகழ்வுகள்யாவும் புவியின் அழிவு நிச்சயம் என்பதனையே உணர்த்தி நிற்கின்றன.

ஓஷோன் படை தேய்வடைதல்.

புவியின் அழிவிற்கான மற்றுமோர் சாத்தியக் கூறுதான் ஓஷோன் படையின் தேய்வுமனிதன்புரியும் பல்வேறு காரணிகளால் இன்று ஓஷோன் படை தேய்வடைந்து வருகின்றதுஇதன்காரணமாக சூரியனிலிருந்து வெளியேறும் நச்சுக்கதிர்களான கலியூதாக் கதிர்களின்தாக்கத்தினால் தாவரங்கள் அழிந்து அதனால் புவியில் உயிர் வாழ்க்கையேகேள்விக்குறியாகிவிடும்மேலும் தோல் புற்றுநோய்தோலில் கரும்புள்ளிகள் தோன்றுதல்,தோல் இறந்து சுருங்குதல்கண்ணில் வெண்மை படருதல்பார்வை பாதிப்படைதல்,சுவாசநோய்கள் ஏற்படல் என இதுபோன்று பல்வேறு நோய்களினால் உயிர் ஜீவிகள்பாதிக்கப்பட்டு அவை மறிக்கநேரிடும்.

சூழல் மாசடைதல்


சூழல் மாசடைதலும் பூமியின்அழிவுக்குப் பங்களிப்புச் செய்யும்மற்றுமொரு காரணி என இன்றையவிஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்இதில் அதிகளவுதாக்கம் செலுத்துவது நவீனஇலத்திரனியல் சாதனங்கள்என்றால் ஆச்சரியப் படுவீர்கள்.இன்று அதிகளவு பயன்பாட்டில்உள்ள கணிணிகையடக்கத்தொலைபேசிதொலைக்காட்சி,வானொலி என்பன அதிகமதிகம்உற்பத்திசெய்யப்பட்டு நுகரப்படும்பொருட்களாகும்இச் சாதனங்களில் பல இரசாயன மூலங்கள் சேர்க்கப்பட்டுள்ளனஇவற்றைப்பயன்படுத்த முடியாதுபோகும் சந்தர்ப்பத்தில் நாம் எமது சுற்றுப்புறச் சூழலுக்கு இவற்றைவிட்டு விடுகின்றோம்காலப்போக்கில் இச்சாதனங்களிலுள்ள இரசாயன மூலங்கள்சூழலுக்கும் மனிதனுக்கும் பலத்த பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றனஇவ்வாறுகுப்பையாக்கப்படும் இலத்திரனியல் கழிவுகள்  e-waste இன அழைக்கப்படுகின்றன.இச்சாதனங்களில் உள்ள இரசாயனக் கலவைகள்பார உலோகங்கள் சூழலுடன் சேர்ந்து மண்நீர்என்பவற்றை பாதிப்படையச் செய்து தாவர வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்இதனால்அவற்றை உணவாகக் கொள்ளும் உயிரினங்கள் பல நோய்களுக்கு ஆளாகி இறக்க நேரிடும்.

உலகளவில் வருடாந்தம் 20 – 50 மெட்ரிக்தொன் இலத்திரணியல் கழிவுகள் e-waste சூழலுக்குவிடப்படுகின்றனஅமெரிக்காவில் மாத்திரம் வருடாந்தம் 12 - 20 மில்லியன் கணிணிகளும் ஜெர்மனியில் 35 இலட்சம் தொலைக்காட்சிகளும் வருடாந்தம் பழுதடைந்துகழிவாக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதுஎனினும் தற்போது அதிகமாக கையடக்கத்தொலைபேசிகளே இலத்திரணியல் கழிவுகளாக சூழலில் சேர்க்கப்படுகின்றன எனக்கணிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரு கணிணியை உற்பத்தி செய்கையில்  90Kg கழிவுப்பொருட்கள் உண்டாவதாகவும்33,000 லீற்றர் நீர் மாசடைவதாகவும் அதிகமானளவு வளி மாசடைவதாகவும் ஆய்வுகள்சுட்டிக்காட்டுகின்றனஓர் கணிணியே இந்த அளவு சூழலை மாசடையச் செய்யுமெனில்வருடாந்தம் கழிவாக்கப்படும் தொன்கணக்கான கணிணிகளால் ஏற்படும் பாதிப்பைச் சற்றுசிந்தித்துப் பாருங்கள்இவற்றில் உள்ள  Cadmium Arsenic   Astronium> ஈயம்தகரம் என்பனவேகழிவுகளாக மாறுகின்றனஇக்கழிவுகள் பூமியை துரிதகதியில் அழிவுக்குள்ளாக்குவதாகவிஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நீர் மாசடைதல்

உயிர் வாழ்க்கைக்கு நீர் மிக மிகஅத்தியவசியமானதொன்றாகும்உலகில் 79%நீரால் அமைந்திருப்பது இதன்முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.அந்த நீர் இன்று மனிதனால் மாசுபடுத்தப்பட்டுவருகின்றதுஒவ்வொரு நாளும்ஆயிரக்கணக்கான தொன் கழிவுகள் கடலிலும்இதர நீர்ப் பரப்புகளிலும் கொட்டப்பட்டுவருகின்றனகழிவு நீர்களும் குப்பைகூழங்களும் தொழிட்சாலைகளின்உற்பத்தியில் கழிவான பொருட்களும்பலவிதமான அமிலங்கள் சேர்ந்த இரசாயனக்கழிவு நீர்களும் நீர் நிலைகளில் விடப்பட்டுமாசடையச் செய்யப்படுகின்றனமேலும்கடலில் செல்கின்ற ஆயிரக்கணக்கானகப்பல்களிலிருந்து விடப்படுகின்ற அழுக்குஎண்ணைகள்ஏவுகனைப் பரிசோதனைகள்என்பவற்றாலும் நீர் மாசடைகின்றதுஇவ்வாறு கடலிலும் கரையிலும் நீர் நிலைகளிலும்சேர்க்கப்படுகின்ற கழிவுகளின் விசத்தன்மையால் அவற்றில் வாழும் உயிரினங்களும்தாவரங்களும் அழிந்து விடுகின்றனஇந்நீரைப் பயன்படுத்தும் மனிதனும் இதனால் பல்வேறுசவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றான்.

விண் கழிவுகள்

புவியில் தான் மனிதன் குப்பைகளை நிரப்பியுள்ளான் என்றால் இல்லைவிண்ணிலும்மனிதன் குப்பைகளைப் பெருக்கி வருகிறான்இது புவியின் இருப்புக்கு இன்னுமொரு பாரியசவாலாகும்புவியைச் சூழ விண்ணில் கொட்டப்பட்டிருக்கும் இக் கழிவுகள்  space debris எனஅழைக்கப்படுகின்றனவிண்வெளி ஆராய்ச்சிக்காக ரொக்கெட்களையும்செய்மதிகளையும்விண்ணுக்கு ஏவவதில் இன்று நாடுகளுக்கிடையே பலத்த போட்டி நிகழ்ந்து வருகின்றது.இச்சாதனங்கள் விண்ணில் சேதமடையும் போது அங்கேயே அவை கைவிடப்பட்டுகழிவாக்கப்படுகின்றன.  சுமார் 4000 இற்கும் அதிகமான விண்வெளி வாகனங்கள் இதுவரைவிண்ணில் செலுத்தப்பட்டுள்ளனநாஸா நிறுவனத்தின் புள்ளிவிபரப்படி இதுவரை விண்ணில்புவியைச் சூழ 7 - 10 சென்றிமீற்றர் அகலமான 1300 குப்பைகள் space debris உள்ளதாகக்கணிப்பிடப்பட்டுள்ளதுஇவை அனைத்தும் புவியின் இருப்புக்கு பாரிய அச்சுருத்தலாகும்.

விண்கற்கள்


வியின் இருப்புக்கு அச்சுருத்தலாக உள்ளஇன்னுமொரு காரணிதான் விண்கற்களாகும்.பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குமுன்னர் பாரியதொரு விண்கல் பூமியில்வீழ்ந்ததனாலேயே உலகில் வாழ்ந்தடைனோஸர்கள் அழிந்ததாகக்கருதப்படுகின்றதுவிண்கற்கள் பூமியுடன்மோதுவதுதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள்உள்ளதாக விண்ணியல் ஆய்வாளர்கள்கூறுகின்றனர். 2019ஆம் ஆண்டில் ஒரு விண்கல்புவியுடன் மோதும் அபாயம் உள்ளதெனநாஸா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 1.24 மைல் நீளமான பாரிய விண்கல் ஒன்று புவியின்சுற்றுப் பாதையை நோக்கி வந்துகொண்டிருப்பதாக இவர்கள் கூறுகின்றார்கள்இக்கல் 2002NT7 எனப் பெயர்டப்பட்டுள்ளதுஇது கடலில் வீழ்ந்தால் பல கிலோமீற்றர்களுக்கப்பால் அலைகள்உயர்ந்து பல நாடுகள் முற்றாக மூழ்கும் அபாயம் உள்ளதாகவும்நிலத்தில் வீழ்ந்தால் பலவருடங்களுக்கு பூமியானது தூசு துகள்களால் மூடப்பட்டு சூரிய ஒளி மறைக்கப்பட்டு பூமிஇருளுக்குள் மூழ்கி தாவர வளர்ச்சி பாதிப்படைந்து அதனால் உயிர் வாழ்க்கைகேள்விக்குறியாகிவிடும்புவியோடுகளும் சிதைந்து புவியும் அழியும் என விஞ்ஞானிகள்எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

சூரிய எரிசக்தி தீர்ந்துபொதல்

புவியின் அழிவை உறுதிப்படுத்தும் மற்றுமொரு சாத்தியப்பாட்டை அவதானிப்போம்.  சூரியமண்டலத்தின் சீரான இயக்கத்திற்குப் பிரதான காரணம் சூரியனின் சீரான இயக்கமாகும்.சூரியனின் இயக்கச் சக்திக்குக் காரணம் அதிலுள்ள ஐதரசன் (Hydrgenவாயுவும் இன்னும் சிலதுணைக் காரணிகளுமாகும்சூரியன் தனது சக்தியை இழந்தால்புவியும் ஏனைய கோள்களும்சூரியனின் ஈர்ப்புச் சக்தியிலிருந்து விடுபட்டு தமது பாதைகளிலிருந்து விலகி ஒன்றோடுஒன்று மோதி சின்னாபின்னமாகி விடும்சூரியன் அழிந்துவிடும் என்பது யூகமான கூற்றல்ல.அதனை ஆராய்ச்சி செய்துள்ள தற்போதைய விஞ்ஞானிகள்சூரியனில் கருப்புப் புள்ளிகள்காணப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்இது சூரியன் தனது சக்தியை இழந்து வருவதனைக்காட்டுகிறது.

சூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து வருவதனாலே இந்தக் கரும் புள்ளிகள்தோன்றியுள்ளனஇன்னும் பல வருடங்களில் சூரியன் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றிஇருண்டு அது ஒரு கருந்துளையாக (Black holeசெயற்பட ஆரம்பிக்கும்கருந்துளைகளுக்குதமக்கு அண்மையிலுள்ள பிற பொருட்களை உளளீர்த்துக்கொள்ளும் சக்தி காணப்படுகின்றது.எனவே சூரியன் ஒளி இழந்து கருந்துளையாக மாறினால் அதன் அருகிலுள்ள இதர கோள்கள்,சந்திரன்ஒளிஒலி போன்ற அனைத்து விண்பொருட்களையும் தன்னுள் ஈர்த்து ஒன்றோடுஒன்றாகி விடும்இச்செயற்பாட்டினையே பின்வரும் குர்ஆனிய வசனம் 1400 ஆண்டுகளுக்குமுன்பே கூறிவிட்டுள்ளது. “சூரியன் (ஒளியிழந்துசுருட்டப்படும் போது” (அல்குர்ஆன் 81:1) “சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்படும் (அல்குர்ஆன் 75:9) இவ்வாறு விண்ணில் காணப்படும்அனைத்து நட்சத்திரங்களும் ஒளியழந்து கருந்துளையாகிவிடும்அல்லாஹ் கூறுகின்றான். “நட்சத்திரங்களும் (ஒளியிழந்துஉதிர்ந்துவிடும்போது” (81:2)


இவ்வாறு புவியின் இறுப்பு அபாயகரமானபல்வேறு சவால்களைஎதிர்கொண்டிருக்கின்றதுநாம் இதுவரைஆராய்ந்தவையல்லாத இன்னும்எத்தனையோ ஆபத்துக்கள் இந்த பூவுலகின்அழிவிற்குக் காரணமாயுள்ளனஇதுபோன்ற பல காரணிகளை முன்வைத்து இப்புவிநிச்சயமாக அழிந்துவிடும் என்பதைவிஞ்ஞானிகள் சந்தேகமின்றிஎடுத்துக்கூறுகின்றனர்அது மட்டுமன்றி மனிதவாழ்வுக்கு ஏனைய கோள்கள்சந்திரன் என்பனபொருந்துமா என ஆராய்ந்து அங்கு மக்களைகுடியமர்த்தும் முயற்சிகளிலும் விஞ்ஞானிகள்களமிறங்கியுள்ளனர்எனவே உலகம் ஏன்பிரபஞ்சமே அழியும் என்ற அல்குர்ஆனின்கூற்று மிகமிக நிதர்சனம் என்பது யாவரும்அறிந்த உண்மைஇதுவே அல்குர்ஆன் ஓர்இறை வேதம் என்று கூற சிறந்த சான்றுமாகும்.

 அப்படியெனில் புவியும் அதிலுள்ள உயிரினங்களும் அழிந்ததன் பின்னர் இப்பிரபஞ்சமேசூனியமாகி இல்லாமல் சென்று விடுமாஅதேபோன்று படைப்புக்களிலேயே மிக உயர்ந்தபடைப்பாகிய மனிதனுடைய வாழ்வு முகவரியற்று அர்த்தமற்றதாகி விடுமாசாதாரண புழுபூச்சிகள் போன்று அறிவு ஜீவியான மனிதனும் மரித்ததன் பின்னர் மண்ணோடு மண்ணாகிச்சென்றுவிடுவானாஉண்மையிலே இது நியாயம்தானா?” என்று இதுபோன்ற பல கேள்விகள்எம்முள்ளத்தில் எழுவது இயல்பானதேஎனவே மனிதனது வாழ்க்கை குறித்து ஆழமாகச்சிந்திக்கும் ஒருவர் நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை போலியானது அழிந்துபோகக் கூடியதுஎன்று சிந்திக்கும் அதேவேளை அர்த்தமுள்ள வாழ்க்கையொன்று இதற்குப் பின்னால்இருக்கவேண்டும் என்ற திடமான முடிவுக்கு வருவார்அதுவே இஸ்லாம் கூறும் மறுமையின்நிரந்தரமான வாழ்வாகும்இவ்வுலகம் அழிவதும் மறுமை நிதர்சனம் என்றும் 14நூற்றாண்டுகளாகக் கூறி வரும் அல்குர்ஆன் இறைவேதம் என்பது உண்மையிலும் உண்மைஎன்பதுதான் நிதர்சனம்.